திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த முன்மொழிவு உத்யோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹெனா சிங்கரிடம் கையளிக்கப்பட்டது.
புத்த பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய திரிபீடகத்தை பாதுகாத்து வளப்படுத்தி எழுத்து மூலம் அதனை உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்மைச் சார்ந்ததாகுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நூல் உருப் படுத்தப்பட்ட திரிபீடகம் அச்சுப் பிரதியாக வெளியிடப்படும் வரை அதனை பாதுகாத்த பெருமை இலங்கை மகாசங்கத்தினரையே சாரும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , யுனெஸ்கோவின் உலக ஞாபக நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த மரபுரிமை பட்டியல்படுத்தப்படுவதை பார்க்கிலும் முக்கியத்துவம் பெறுவது இதன் மூலம் இதன் உரிமை மற்றும் பொறுப்பு தொடர்பில் இலங்கை முழு உலகினதும் அங்கீகாரத்தை பெறும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எத்தகைய எதிர்ப்புகள், சவால்கள் வந்துபோதும் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு எடுத்து வைக்கப்பட்ட எட்டினை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.