Home உலகம்சோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி

சோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி

by admin

சோமாலியாவின் தலைநகர் மொகடி{ நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சக அலுவலகத்தின் மீது இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சர் சக்கர் இபுராஹிம் அப்துல்லா உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பலத்த காயங்களுடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அல் கொய்தா இயக்கத்தின் ஆதரவு இயக்கமான அல் ஷபாப் அமைப்பினர் சோமாலியாவில் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More