Home இலங்கைஇரு தமிழர்கள் கடத்தல் – முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது

இரு தமிழர்கள் கடத்தல் – முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது

by admin


முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலைக் கப்பல் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக புலனாய்வுத்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை – வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசித்த வடிவேல் லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமாநந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குறித்த இரு தமிழர்களுக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிகளான அட்;மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரும் அறிந்திருந்துள்ளதாகவும், அவர்களும் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் புலனாய்வுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More