Home சினிமாவிளையாட்டை மையப்படுத்தியதா விஜயின் புதிய படம்?

விளையாட்டை மையப்படுத்தியதா விஜயின் புதிய படம்?

by admin


ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜயின் 63ஆவது படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாகவே, நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பதுண்டு. இதனால், படப்பிடிப்பில் துணை நடிகர்-நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கைபேசியைக் கூட பயன்படுத்த அனுமதிப்பதில்லை. தனியார் பாதுகாவலர்களும் நிறுத்தி வைக்கப்படும்.

எனினும் அதையும் மீறி சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுவதுண்டு. இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63ஆவது படத்தின் கதையும் வெளியாகிவிட்டதாக கூறப்படுகின்றது.

கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருக்கும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பின்னர் கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் காவல்துறையினர் அசமந்தம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகாரர்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.

அதன்போது கொலைக்கு பின் கடும் சதித்திட்டங்கள் இருப்பது தெரிய வருகின்றது. வில்லன்களுடன் சண்டையிட்டு அழிக்கின்றார். பின்னர் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பதே கதை என்று கூறப்படுகின்றது.

முன்னரே விஜய்யின் கில்லி படமும் விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படமாகும். அதை விட விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More