Home இலங்கைபிரதமரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்

பிரதமரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்

by admin


மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் . வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் மோசடி நடவடிக்கையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்து அமைய அவரை மையப்படுத்தியே இடம் பெற்றது என்பது அனைத்து தரப்பினரும் அறிந்த விடயம்.

பிணைமுறி மோடியாளர்கள் ஆட்சியில் இருக்கும் வரையில் முறையான ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்கப்பெறாது. தலைமைறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு மீள் அழைத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார் என்பதனால் ஆட்சிமாற்றத்தின் பின்னரே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More