2ஆம் இணைப்பு..
டுபாயில் வைத்து கைதான மாகந்துரே மதுஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த, டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்களென, அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, கஞ்சிப்பான இம்ரான் உள்ளட்டவர்களிடம் விசாரணை..
Mar 28, 2019 @ 04:26
பிரபல பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பான இம்ரான் உள்ளிட்ட மூவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
கஞ்சிப்பான இம்ரான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு நோக்கி செல்ல இருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கஞ்சிப்பான இம்ரான் உள்ளிட்ட மூவரும் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவற்துறையின் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவர்களிடம் விசாரணை செய்து வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரபல பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவரும் நேற்று டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.