197
யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தல்லையப்புலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வயோதிபர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு இராசதுரை என்ற 67 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளிலுடன் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவரை அயலில் உள்ளவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love