148
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுனருக்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரை எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love