Home இலங்கைஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் தாக்குதல்…

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் தாக்குதல்…

by admin


யாழ்ப்பாணம் நவாலி அரசடி வீதியில் உள்ள ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் இனந்தெரியாக குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் வீட்டிலிருந்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (30.03.19) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணா என்ற இளைஞருடைய வீட்டிற்குள் புகுந்த வன்முறைக் கும்பல்,  வீட்டிலுருந்த பெறுமதியான பொருற்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள மானிப்பாய் காவற்துறையினர் , சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More