Home இலங்கைமன்னார் மனிதப் புதைகுழி ஆய்வில், தவறு நடந்திருக்கிறது..

மன்னார் மனிதப் புதைகுழி ஆய்வில், தவறு நடந்திருக்கிறது..

by admin


மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதில் ஏதோ தவறு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும் மன்னார் மனித புதைகுழி விடயத்தில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடத்திற்கு முற்பட்டவை என கார்பன் பரிசோதனை அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது இங்கு பெறப்பட்டுள்ள மனித எச்சங்கள் 50 வருடங்களுக்கு உட்பட்டவை என பரசீலித்துக் கூறுகின்றனர்.

எவ்வாறு இது சாத்தியப்படும்? இதில் எங்கேயோ முக்கியமான பாரதூரமான தவறு நடந்திருக்கிறது. எனவே மனித எச்சங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More