முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லையால் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இக் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லைகளால் தினமும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள மேழிவனம் பகுதியல் தற்போது 52 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றன.குறிப்பாக விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் அதிகளவானோர் தற்போதும் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதும் தினமும் இவர்களது பயிர் செய்கைகளை காட்டுயானைகள் அழத்து வருகின்றன.
எனவே தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டுயானைகளுக்கான பாதுகாப்பு வேலிகள் அமைத்துத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இப்பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையால் சில குடும்பங்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.