Home இலங்கைகீரிமலை நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பிரதேசமாக்குக..

கீரிமலை நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பிரதேசமாக்குக..

by admin

கீரிமலை நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பிரதேசமாக பிரகடன படுத்துமாறு சர்வதேச இந்து மத குருமார் ஒன்றிய தலைவர் பண்டிதர் கலாநிதி து.கு.ஜெகதீஸ்வர குருக்கள் கோரியுள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கீரிமலை காங்கேசன்துறையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயில், சடையம்மா சமாதி , சங்கர சுப்பையா சமாதி, சித்தர்கள் சமாதிகள், சிவன் கோயில் என வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள சைவ தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும்.

அது தொடர்பில் சமய நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் ஒருமித்த நிலையில் நின்று குரல் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்து சமய கலாச்சார அமைச்சும் பொறுப்புடன் செயற்பட்டு தமிழ் மக்களின் வணக்க ஸ்தலங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதேவேளை இதற்காக தமிழ் தலைமைகளும் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More