வடக்கில் நடைபெற்ற பௌத்த மாநாட்டுக்கு 9 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளூநர் அலுவலக தகவல் மூலம் அறிய முடிகிறது. வடமாகாண ஆளூநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பௌத்த மாநாடு நடைபெற்றது அதற்காக 9 இலட்சத்து 16 ஆயிரத்தி 600 ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாக ஆளூநர் அலுவலக தகவல் மூலங்கள் ஊடாக அறிய முடிகிறது.
ஒரு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கான தேநீர் மற்றும் உணவுக்காக 2 இலட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயும் , கொடி கட்டுதல் மற்றும் நூல் கொள்வனவுக்காக 59 ஆயிரத்து 100 ரூபாயும் , பதாகை அலங்காரத்திற்கு 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் . விகாரை நுழைவாயில் அலங்காரம் , அலங்கார பந்தல் அமைப்பு உள்ளிட்ட இதர செலவு 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயுமாக 9 இலட்சத்து 16 ஆயிரத்தி 600 ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை யாழில் கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , ஜெனிவாவில் நாம் ஒரு நாள் செலவு செய்யும் பணத்திற்கு இங்குள்ள ஏழை குடும்பம் ஒன்றினை ஆறு மாத காலத்திற்கு வசதியாக வாழ வைக்க முடியும். எனவும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் எனும் ரீதியில் தேவையற்ற செலவுகளை தான் செய்ய மாட்டேன் எனவும் ஆளூநர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.