1891ல் நடந்த கும்பல் கொலை ஒன்றுக்கு அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகர மேயர் மன்னிப்புக் கோரியுள்ளார். 11 இத்தாலி மற்றும் அமெரிக்கர்களை 1891ஆண்டு கொலை செய்ததற்காகவே இவ்வாறு மன்னிப்பு கேட்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிலர் காவல்துறையினர் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதனால் கோபமடைந்த சில இனவாத கும்பல் அவர்களை தாக்கி, பொதுவெளியில் தூக்கிலிட்டுக் கொன்றிருந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கும்பல் கொலை சம்பவமாக கருதப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி இதற்காக அந்நகர மேயர் லா அமெரிக்க கலாசார மையத்தில் வைத்து மன்னிப்பு கேட்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.