164
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா, தற்போது புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பாவனா கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் என்ற திரைப்படத்தில் இறுதியாக தமிழில் நடித்துள்ளார். அதற்குப் பின்னர், மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.
திருமணத்தின் பின்னர், மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் 99 படத்தில் திரிஷாவிற்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சில காலம் மௌனமாக இருந்து வந்த பாவனா, தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். பாவனாவின் இந்த தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இத் தோற்றத்திலேயே அவர் புதிய திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
Spread the love