Home சினிமாமாறுபட்ட காவல்துறை கதாபாத்திரத்தில் விவேக் :

மாறுபட்ட காவல்துறை கதாபாத்திரத்தில் விவேக் :

by admin



விவேக் இளங்கோவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் படத்தில் நடிகர் விவேக் மாறுபட்ட காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  வெள்ளை பூக்கள் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளமை சிறப்பு அம்சமாகும். இது குறித்து அவர் வழங்கியுள்ள நேர்காணல்,

முன்னோட்டத்தை  பார்க்கும்போது மாறுபட்ட காவல்துறை வேடம் போல தெரிகிறதே?

அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன்.

உங்கள் திரையுலக நண்பர்கள் என்ன சொன்னார்கள்?

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்த முன்னோட்டத்தை காண்பித்ததும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரை இசையமைக்க வைக்கலாம் என்று திட்டமிட்டு காத்திருந்தோம். ஆனால் அவர் பல பணிகளில் பிசியாக இருப்பதால் அது நடக்காமல் போய்விட்டது.

மீடூ இயக்கம் பற்றி?

பெண்களிடம் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நமது கலாசாரத்தின்படி எல்லா பெண்களையுமே தாயாக பார்க்கும்படி தான் வளர்ந்தோம். ஆனால் சமீபகாலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காரணம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆபாச படங்கள் தான். 25 சதவீதம் சினிமாவுக்கும் இதில் பங்கு உண்டு. என்றாலும் 75 சதவீதம் இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள் தான் காரணம் என்றார்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More