Home இலங்கைபுத்தளத்தில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்த 11 பேர் கைது

புத்தளத்தில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்த 11 பேர் கைது

by admin


சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்ததாக தெரிவித்து 11 இளைஞர்கள் புத்தளம் களப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

புத்தளம் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட குறித்த 11 பேரும் கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமான நிலையில், வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை நேற்று மாலை புத்தளம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More