251
கடந்த வருடம் 2018 இல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா றம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 22 மாணவிகள் அனைத்துப் பாடங்கிலும் “ஏ” (9ஏ) சித்தி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். 9மாணவிகள் 8ஏ 1பீ உம். 4 மாணவிகள் 8ஏ 1சீ உம் என சித்தி பெற்றுத் தமதுபாடசாலைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் சித்தி பெற்றுப் பெருமை பெற்றதோடு மட்டுமல்லாது முழுப் பாடசாலைச் சமூகத்தையும் பெருமையடையச் செய்திருக்கிறார்கள் என அந்தப் பாடசாலையின் அதிபர் சிஸ்டர் ஜெயநாயகி.செ தெரிவித்திருக்கிறார்.
Spread the love