148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கணவனிடமிருந்து தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்றுமாறு குடும்ப பெண்ணொருவர் கொடிகாமம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தென்மராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த குறித்த பெண் , தனது கணவர் தினமும் மது போதையில் வந்து தன்னையும் தன் பிள்ளைகளையும் அடித்து துன்புறுத்தி சித்திரவதை புரிவதாக கூறி தனது நான்கு பெண் பிள்ளைகள் உட்பட ஆறு பிள்ளைகளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
குறித்த பெண்ணிடம் முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், பெண்ணையும் அவரது ஆறு பிள்ளைகளையும் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்துள்ளனர்.
Spread the love