Home இலங்கை விசாரணைகளின் பின், நடிகர் ரயன் வேன் ரோயன் கைது…

விசாரணைகளின் பின், நடிகர் ரயன் வேன் ரோயன் கைது…

by admin


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.

அதன் பின்னர் நடிகர் ரயன் வேன் ரோயனிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவற்துறைப்  போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து 18 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட  அவர் வெலிகம காவற்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கஞ்சா வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More