Home இலங்கைதனக்கு தானே தீ மூட்டியவர் உயிரிழப்பு

தனக்கு தானே தீ மூட்டியவர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார் என கூறி யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை கொற்றாவத்தையை சேர்ந்த 33 வயதான அப்துல் ரசீத் முகமட் றம்சித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி குறித்த நபர் வீட்டில் தனக்கு தானே உடலில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டததனை தொடர்ந்து அவரது மனைவியும் அயலவர்களும் தீயை அணைத்து மந்திகை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More