Home பிரதான செய்திகள்மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முகுருஜா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முகுருஜா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

by admin

மெக்சிகோவில் நடைபெற்ற மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். முதல்தர வீராங்கனைகளான ஸ்பெயினின் முகுருஜா பெராரஸ் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா அஸரென் ஆகியோர் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட நிலையில் முகுருஜா 6-1, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது விக்டோரியா அஸரென்கா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதனால் கார்பின் முகுருஜா சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்

கடந்த ஆண்டில் இந்த போட்டியில் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த முகுருஜா அதன் பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More