Home இந்தியாசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பேர் பலி

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பேர் பலி

by admin


சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் தொகுதியில் நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான பீமா மந்தாவி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் நேற்று மாலை சென்று கொண்டிருந்த போது அவர் பயணித்த கார் மீது மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் ஏஐனய வாகனங்கள் மீதும் அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதனால் சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக் சென்ற பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More