Home உலகம்பிரெக்சிற்றினை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு, பிரித்தானிய மகாராணி ஒப்புதல்…

பிரெக்சிற்றினை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு, பிரித்தானிய மகாராணி ஒப்புதல்…

by admin

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்சிற்றினை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரித்தானிய மகாராணி ஒப்புதல் அளித்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு எதிர்வரும் 12-ந் திகதியுடன் முடிவடைகின்றது. இது சாத்தியமானால் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே இதனை தவிர்க்கும் விதமாக பிரெக்ஸிற் நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் தாக்கல் செய்த மசோதா ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியிருந்த நிலையில் அந்த மசோதா மேல்சபையிலும் ஒருமனதாக நிறைவேறியீரந்தது

இதனையடுத்து அந்த மசோதா மகாராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளர். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கை சட்டமாகியுள்ளது.

இந்தநிலையில் இனி பிரித்தானியா ஒப்பந்தத்துடன் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடியும். இதற்காக பிரதமர் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரெக்ஸிற் நடவடிக்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More