Home இலங்கை“குடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு”

“குடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு”

by admin


சுத்தமான குடிநீர் கேட்கும் எங்களது கிராமத்திற்கு மதுபானசாலையா தீர்வு என கேட்டு கிளிநொச்சி பெரிய பரந்தன் கிராம மக்கள் ஐந்தாவது தடவையாக புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று 17-04-2019 காலை ஒன்பது மணி தொடக்கம் 12 மணி வரை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக முன்றலில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக இந்த கவனயீர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

தங்களது பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கிராம மக்களும் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் இவ்வாறு புதிய மதுபானசாலை ஒன்று அமைவது எமது வாழ்க்கையினை சீரழிக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். மது பழக்கத்தை நோக்கி வேகமாக இழுத்துச் செல்லப்படுவதற்கும் இது காரணமாக அமைந்துவிடும்.

இதனை தவிர இரணடு பாடசாலைகள், ஒரு சிறுவர் இல்லம், தனியார் கல்வி நிலையம் என்பன இந்தச் சூழலில் காணப்படுகிறது. எனவே இங்கு மதுபானசாலை அமைக்கப்படுவது பொருத்தமற்றது. என்றனர். இன்றைய தினம் கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர், சட்டத்தரணிகள், புதிய மதுபானசாலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள் பெரிய பரந்தன் கிராம மக்கள் அமைப்புகள் ஆகியோர் சமூகமளித்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

மேலும் கரைச்சி பிரதேச செயலர், நில அளவை திணைக்கள அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள், ஆகியோரும் கலந்துகொண்டனர். எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம், குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்கு மதுபானத்தை அல்ல, குடி நீர்க்கு போராடும் எங்களுக்கு மதுபானசாலையா? பெரிய பரந்தன் மக்களின் வாழ்வாதாரத்“தை அழிக்கும் மதுபானசாலை வேண்டாம், மாணவிகள் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குட்ப்படுத்தும் மதுபானசாலை வேண்டாம் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More