இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17) புதன் கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதில் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

எனினும் சம்பவம் இடம் பெற்ற போது வீட்டில் யாரும் இல்லாததினால் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. வீட்டில் உள்ள தென்னை மரங்களை தாக்கிய இடி மின்னல்,வீட்டையும் தாக்கியுள்ளது.

இதன் போது வீடு முழுமையாக எரிந்துள்ளதோடு,வீட்டினுள் காணப்பட்ட பெறுமதியான மின் சாதனப்பொருட்கள்,உடைகள் உற்பட இதரப்பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.