Home இந்தியா12 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

12 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

by admin

பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.

முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் திகதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.

அதேபோனறு , கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், எதிர்வரும் மே 23-ந் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More