Home உலகம்தென்கொரியாவில் கத்திக்குத்து -12 வயது சிறுமி உள்பட 5 பேர் பலி

தென்கொரியாவில் கத்திக்குத்து -12 வயது சிறுமி உள்பட 5 பேர் பலி

by admin

தென்கொரியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்துள்ளார்.

இந்தநிலையில் தீயானது ஏனைய வீடுகளுக்கு பரவியுள்ள நிலையில் வீடுகளில் உள்ளவர்கள் அச்சத்தில் வெளியில் வந்த போது அவர்ள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல்  மேற்கொண்டுள்ளார்.
இதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்தியதுடன் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக தெரிவித்த போதும் அவர் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More