178
பிரபல பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவர், நாடு கடத்தப்பட்டுள்ளனர். இருவரும், யு.எல். 226 எனும் விமானத்தி நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர்களை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட, பியல் புஷ்ப குமார, மொஹமட் அஸ்ரிடீ மொஹமட் இன்ஹாம் ஆகிய இருவரிடமும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love