Home இந்தியாவடமாநிலங்களில் புயல் – மழை – உயிரிழப்பு 53 ஆக உயர்வு

வடமாநிலங்களில் புயல் – மழை – உயிரிழப்பு 53 ஆக உயர்வு

by admin

இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது பெய்து வரும் புயல் மற்றும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் ; எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  வடமாநிலங்களில் தற்போது பெய்து வரும் புயல் மற்றும் கனமழையினால் ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்ததனால் பல இடங்களில் வீதிகள் , மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

அந்தவகையில் இந்த புயல் மற்றும் மழை காரணமாக ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More