Home இலங்கைஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை

ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 
ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை பார்த்து 5 பவுண் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை கூலாவடிக்கு அண்மையாக உள்ள ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலேயே இன்று (20) சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

வீட்டில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியை சல்லடை போட்டுத் தேடி அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளனர்.

இறப்பு வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய குடும்பத்தலைவர் வீடு உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More