Home இலங்கைஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம்

உரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமிருவர் படுகாயமடைந்துள்ளனர். உரும்பிராய் சந்தியில் , இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது.

அதில் புன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார். மற்றுமொரு இளைஞனும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவலதுறையினர்; விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More