Home இந்தியாபொன்னமராவதி இயல்பு நிலைக்கு திரும்புகின்றது

பொன்னமராவதி இயல்பு நிலைக்கு திரும்புகின்றது

by admin


ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவலான குரல்பதிவால் பதற்றங்கள் உண்டான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய குரல்பதிவு சமூக ஊடகங்களில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பதற்றங்கள் உண்டானது.

எனவே, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு சட்ட ஒழுங்கு இயல்பாகவே உள்ளது எனவும் அங்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More