Home இலங்கைகுண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்து மன்னாரில் கறுப்புக்கொடி

குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்து மன்னாரில் கறுப்புக்கொடி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி ஏற்றி தமது அனுதாபங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை(22) மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு சிறிது நேரத்தில் மூடப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதேவேளை மன்னார் பஸார் பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து கறுப்புக் கொடிகளையும் உடனடியாக அகற்றுமாறு சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல்நிலைய பொறுப்பதிகாரி உத்தரவிட்ட நிலையில் காவல்துறையினர் சில கொடிகளையும் கழட்டிச் சென்றுள்ளனர்.

இதன் போது போது வர்த்தகர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் காவல்துறையினர்அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More