Home பிரதான செய்திகள்ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்

by admin


ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் 12 வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியானது நடப்பு சம்பியன் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடத்தப்படுவதாக இருந்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று கலரிகள் அனுமதி விவகாரத்தால் பயன்படாமல் இருக்கின்றதனால் இறுதிப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் தற்பொழுது ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஐதராபாத்தில் மே 12ம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More