Home இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பில் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் – எச்சரிக்கையின் பின் விடுதலை

குண்டுவெடிப்பு தொடர்பில் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் – எச்சரிக்கையின் பின் விடுதலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கை கலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை காவல்துறையினர் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இரு இனங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் குண்டு வெடிப்பு தொடர்பில் கருத்து முரண்பட்டு , வாய் தர்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில் கடை உரிமையாளரால் சுன்னாகம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

காவல்நிலையத்தில் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் , கடுமையாக இருவரையும் எச்சரித்து விடுவித்தனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More