Home இலங்கைநாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுதலை…

நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுதலை…

by admin


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் UL 226 என்ற விமானம் மூலம் நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 24 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More