Home உலகம்அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி

by admin

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியும் இயக்கிய நிலையில் உரிமையாளருடன் விமானத்தில் 5 பேர் பயணம் செய்திருந்தனர். இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More