Home இலங்கைமாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞருக்கு விளக்கமறியல்

மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞருக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கொழும்பு வெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டையை வைத்திருந்ததுடன் காவல்துறையினரின் விசாரணையின் போது மாறுபட்ட தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்ட நிவையில் அதன் உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்துக்கு வந்து தனது மோட்டார் சைக்கிள் என உரிமை கோரியுள்ளார்.

அதன்போது இளைஞனின் தேசிய அடையாள அட்டையைப் பார்வையிட்ட காவல்துறையினர் அதில் வெள்ளவத்தை என முகவரியிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது இளைஞன் மாறுபட்ட தகவல்களை வழங்கியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை பிணையில் விடுவிக்க காவல்துறையினர் ஆட்சேபனை தெரிவித்ததனால் சந்தேகநபரை வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

‘சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் உயர் கல்வியை கொழும்பில் தொடர்ந்துவிட்டு தற்போது நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவரது மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையாக நிறுத்திவிட்டு வடமராட்சிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

அதன்பின்னரே காவல்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். அதனை உரிமை கோரி பெற்றுக்கொள்ள வந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

#identitycard #wellawathe #colombo

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More