Home இலங்கைஉத்தரவுக்காக காத்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்புக் குழு – இலங்கை செல்லுமா?

உத்தரவுக்காக காத்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்புக் குழு – இலங்கை செல்லுமா?

by admin


இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு தேசிய பாதுகாப்புக் குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியா இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளது அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள் பயங்கரவாத விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் உத்தரவு கிடைத்ததும் இவர்கள் இலங்கை பயணமாவார்கள் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினர், பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர், அமெரிக்க FBI புலனாய்வுக் குழுவினர் உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் ஏற்கனவே இலங்கைக்கு சென்றுள்ள நிலையில்  இஸ்ரேல் உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Indiannationalsecurityagency #eastersundayattacklk #india #srilanka

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More