Home இலங்கைமன்னார் பேசாலை வான் பரப்பில் ஆள் இல்லாத விமானம் ?

மன்னார் பேசாலை வான் பரப்பில் ஆள் இல்லாத விமானம் ?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

-மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த ஆள் இல்லாத விமானம் சத்தம் இன்றி பறந்துள்ளது.

இதுதொடர்பில் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை வானத்தை நோக்கிய துப்பாக்கி பிரையோக சத்தம் கேட்டதை அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் ஆள் இல்லாத விமானம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாக வில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை முதல் தலைமன்னார் பகுதியில் முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#army #mannar # checking #drone

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More