Home இலங்கைதேடப்பட்டு வந்த 6 பேரும், அடையாளம் காணப்பட்டனர்…

தேடப்பட்டு வந்த 6 பேரும், அடையாளம் காணப்பட்டனர்…

by admin


இலங்கையில் கடந்த 21ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் காவல்துறை தலைமையகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக, பாதிமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையே தேடப்படும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் கடந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் ஏனைய மூவரும் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரின் தடுப்பில் உள்ளதாகவும் காவல்துறை ஊடகம் மேலும் தெரிவித்தது. #eastersundaylk #srilanka #arrest

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More