மகிந்த நியமித்த கோத்தபாய பயங்கரவாத தடைக் குழு!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலையில் குழுவொன்றை எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். அரசாங்கம் ஒன்று பாதுகாப்பு கட்டமைப்புக்களை கொண்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு குழுவொன்றை அமைப்பது அரசியல் சட்டத்திற்கு முரணான விடயம் என்றும் கூறப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த காலத்தில் படைத்துறை கட்டமைப்புக்களில் இருந்தவர்களை கொண்டு இவ்வாறு குழுவை அமைப்பது இன்னொரு அரசிற்கு சமமான விடயம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, இந்த குழுவில் 2008/2009 காலப் பகுதியில் கொழும்பில் வைத்து 11இளைஞர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்து அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்ப தளபதி வசந்த கரன்னாகொடவும் அடங்குகின்றார்.
நாட்டின் தபோதைய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, உயர் இராணுவ முன்னாள் தளபதிகள், மூத்த பாதுகாப்பு மற்றும் காவற்துறை உத்தியோகத்தர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நாட்டின் நிலவரம் குறித்து அறிக்கையொன்றினை உடனடியாக அறியத்தர எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச பணித்துள்ளார்.
அந்தவகையில் இதற்காக முன்னாள் பாதுகாப்பு தளபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களை பயன்படுத்தி தற்போதுள்ள நிலைமைகளை ஆராய தீர்மானம் எடுக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பு பிரதானி ஜகத் ஜெயசூரிய, முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக, முன்னாள் விமானப்படை தளபதி ரோஹான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, அட்மிரல் ஜகத் கொலம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சந்திர பெர்னாண்டோ, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வகிஷ்த்த,வடக்கின் முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. #mahindarajapaksa #gotabayarajapaksa #. #eastersundaylk #srilanka
1 comment
திரு. மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட, ‘திரு. கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான பயங்கரவாதத் தடைக் குழு’, தொடர்பான ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேனவின் எதிர்வினைகள் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை?
எப்படி இருந்தபோதும், ‘ராஜபக்ஷர்களுடன் சேர்ந்து அரசமைத்தால் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராகத் தான் இருப்பார்’, என்ற சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையில் அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக் கலைப்புச் செய்தவரது அறிவு எப்படி இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எதை எதையெல்லாமோ சாதிப்பவர் போல் வெற்று வேட்டு விசாரணைக் குழுக்களை நியமிப்பதோடு இவரது காலம் கரைகின்றது, என்பதே உண்மை!
பாதுகாப்புத் துறைப் பிரதானியாக இருக்கும் இவர், அரசியலமைப்புக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள இக் குழுவின் அங்கத்தவர்களான முன்னர் பாதுகாப்புப் படைப் பிரதானிகளுக்கு எதிராகவாவது நடவடிக்கை எடுப்பாரா, என்றால் அதுவும் சந்தேகமே?
குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் பாதுகாப்புப் பிரிவுப் பிரதானிகளின் சீருடை உள்ளிட்ட பட்டம், பதவிக்கான சலுகைகள், ஓய்வூதியம் போன்றவற்றை மீளெடுப்பதோடு, அவர்களின் குடியுரிமையையும் இவரால் நியாயமாகப் பறிக்க முடியும். அதைச் செய்ய முன்வருவாரா? இத் தருணத்திலாவது இதைச் செய்யாது போனால், என்றோ துறந்திருக்க வேண்டிய தனது பதவியை, இன்றாவது துறக்க வேண்டும். செய்வாரென நம்புவோம்!