Home இலங்கைமன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது :

மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற தேடுதல்களின் போது மௌலவி உற்பட 12 பேர்கள் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போதே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களும் மன்னார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினமும் காலை முதல் மன்னாரின் பல்வேறு இடங்களில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #mannar #puthukudiyirupu #arrest #army

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More