தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி அரசாணை பிறப்பித்திருந்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் தமிழக லோக் ஆயுக்தா தலைவராகவும் ஏனைய உறுப்பினர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
இதனையடுத்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், சிரேஸ் வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித் துறை சாரா உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டதாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு இவர்கள் நியமனத்தை எதிர்த் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏப்ரல் 5ஆம் திகதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இருவரது நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது . இதன’;போது தமிழக அரசு சார்பில், லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எனவே நீதிமன்ற தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததோடு, இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.