Home இலங்கையாழ்.தீவக சுற்றிவளைப்பு தேடுதல்களில், ஐவர் கைது…

யாழ்.தீவக சுற்றிவளைப்பு தேடுதல்களில், ஐவர் கைது…

by admin

யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயினாதீவில் நேற்றைய தினம் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைய இறுவெட்டுகள் (சிடி) வைத்திருந்தமை, மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் அரபு மொழி புத்தகங்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

அதேவேளை வேலணை மண்கும்பான் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஊர்காவற்துறை காவற்துறையினர் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #jaffna #roundup #srilanka #eastersundaylk #arrested

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More