Home இலங்கைகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி :

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் 30.04.2019 இன்று மாலை  விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த  முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரை இவ் விபத்தில் பலத்த காயங்களுடன்  1990  நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது  வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று  சிகிச்சை அளித்தபோதும்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயம்.

இவ் விபத்து  தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி  காவல்துறையினர்மேற்கொண்டுவருகிறார்கள்

#kilinochchi #accident  #dead

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More