Home உலகம் நாட்டைவிட்டு வெளியேறும் முடிவிலிருந்து மதுரோ பின்வாங்கல்

நாட்டைவிட்டு வெளியேறும் முடிவிலிருந்து மதுரோ பின்வாங்கல்

by admin


வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நாட்டைவிட்டு வெளியேறுவதாக எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததாகவும் எனினும் அவர் பின்னர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலாவில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடிய போதும் ராணுவம் மறுத்துவிட்டது.மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார் எனவும் எனினும் ரஸ்யாவால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமையும் வெனிசுவேலாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

#Nicolas Maduro #Venezuela

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More