Home உலகம்அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி

by admin

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை வகுப்புகள் முடிந்து வெளியே மாணவர்கள் வெளியே வரும்போது திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக் வந்த காவல்துறையினர் காயமுற்ற 4 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து கண்காணிப்பு கமரா மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப்பாடப்பிரிவு மாணவர் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 40,000 பேர் துப்பாக்கிக்கு பலியாகியுள்ளனர் என்பதுடன் அவர்களில் மூன்றில் இரண்டு சதவீதமானோர் துப்பாக்கியால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#america #northcarolina #univercity #shooting #gun

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More