Home இலங்கைவழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – வடக்கு பாடசாலைகளில் சிசிடிவி :

வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – வடக்கு பாடசாலைகளில் சிசிடிவி :

by admin

வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து உள்ளூர் தீவிராவத அமைப்புகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

தற்போது பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்பன இராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ளன. இந்த நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பை அளிப்பதுடன் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பை அளிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  குண்டு வெடிப்பு தாக்குதல்களை அடுத்து பாடசாலைகள் எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.
#cctv #isis#schools #church #eastersundaylk
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More